மே மாதத்தின் முதல் நாள் ஆண்டு முழுவதும் கடினமாக உழைக்கும் உறுப்பினர்களுக்காக சர்வதேச தொழிலாளர் தினமாக பரவலாக கொண்டாடப்படுகிறது. இந்த சமூகத்திற்கு தொழிலாளர்களின் பங்களிப்பை கொண்டாடும் வகையில் மே 1 சர்வதேச விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மேலும், அனைத்து தொழிலாளர்களும் தங்கள் உழைப்பைப் பாதுகாக்க வேண்டும், நியாயமான ஊதியங்கள் வழங்கப்பட வேண்டும் மற்றும் வேலை செய்ய பாதுகாப்பான நிலைமைகள் இருக்க வேண்டும் என்பதை இது நினைவூட்டுகிறது.
ஒன்றுபட்ட முயற்சிகளின் சக்தியையும், சமூகத்திற்கு ஒவ்வொரு தனிநபரின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுவதாக இந்த நாள் செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம். அனைத்து துறை உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டுவோம். இனிய உழைப்பாளர் தினம்!
நீங்கள் நேசிக்கும் வேலையை உங்கள் வாழ்வில் செய்யுங்கள், உங்கள் வாழ்க்கை உங்களை நேசிக்கும்!
நீ செய்யும் தொழிலுக்கு நீ முதலாளி இல்லையானாலும், உன் வாழ்க்கைக்கு நீ முதலாளியாடா!
உன் உழைப்பால் இந்த உலகை தாங்கு, இந்த உலகம் உன்னை தலைமேல் வைத்து தாங்கும் !
வலியால் உன் உடல் தேயந்தாலும், உன் உழைப்பு எப்பொழுதும் தேயாது!
மற்றவர்கள் உன்னை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு நீ இல்லை ஆனாலும், உன்னை பார்த்து பெருமை படும் அளவிற்கு நீ இரு!
உன் உழைப்பால் நீ சிந்தும் ஒரு ஒரு துளி வியர்வையும், உன் வாழ்க்கைக்கு நீ போடும் விதையடா!
உன் வாழ்கை உன் கையில், உன்னை வாழ வைப்பது உன் வாழ்க்கையின் கையில்!
உழைப்பவனுக்கு தெரியும் பணத்தின் மகிமை, உழைக்காதவனுக்கு தெரியும் பணத்தின் பெருமை!
மகிழ்ச்சி என்பது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிலிருந்து வரும் முழுமையான உணர்வு!
இலக்கு இல்லாமல் திசை இல்லை, பாதை இல்லாமல் பயணம் இல்லை, உழைப்பில்லாமல் ஊதியம் இல்லை!
நேரம் பாக்காமல் உழைக்கும் ஊழியர்களை ஊட்டுவிக்கும் நேரம் இது!
முழு திருப்தியுடன் வேலையைச் செய்வது வாழ்க்கையின் நிறைவை வீழ்த்துகிறது!
பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் அயராத உழைப்பு மற்றும் சேவையால் நமது அன்றாட வாழ்க்கை சீராக செல்கிறது!
நீங்கள் செய்வதை நேசியுங்கள், பின்னர் உங்களை நீங்களே நேசிப்பீர்கள்!
உங்கள் குரலை எழுப்ப ஒருபோதும் தவறாதீர்கள். எப்பொழுதும் அதை உயரமாக வைத்திருங்கள். உலகை உள்ளங்கையால் ஆளலாம்!
வெற்றியோ தோல்வியோ முக்கியமல்ல, உன்னால் முடிந்தவரை போராடு, உன் உழைப்பால் நீ உயர்வாய்!
தோல்வி இல்லாத சாதனையார்களும் அல்ல, வெற்றி இல்லாத உழைப்பாளிகளும் அல்ல!
எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தன் கடமையை நிறைவேற்றுபவனே உண்மையான உழைப்பாளி!