சரியான உறவு என்பது நீங்கள் ஒருவரையொருவர் கோபமாகவோ, வருத்தப்படவோ அல்லது எரிச்சல் அடையவோ கூடாது என்பது அல்ல…. நீங்கள் எவ்வளவு விரைவாகத் தீர்த்துக்கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்புகிறீர்கள் என்பதுதான்.
வானத்தில் சூரியன் எரியும் வரை, இருண்ட இரவில் சந்திரன் தனது ஒளியைப் பிரகாசிக்கும் வரை, பொங்கி எழும் நீலக்கடல்கள் அமைதியாகி வறண்டு போகும் வரை நான் உன்னை நேசிப்பேன். காலத்தின் இறுதி வரை நான் உன்னை நேசிப்பேன்.
என் நாள் எவ்வளவு கொடுமையாக இருந்தாலும், ஒரு நிமிடம் கூட உன்னிடம் பேசினால் எல்லாம் சரியாக இருக்கும்.
ஒரு நாள் யாராவது உங்கள் வாழ்க்கையில் வந்து, நீங்கள் எப்போதும் விரும்பியபடி உங்களை நேசிக்கலாம்.
நான் விரும்பும் அளவுக்கு உங்களை அடிக்கடி பார்க்க முடியாமல் போகலாம். இரவு முழுவதும் உன்னை என் கைகளில் பிடிக்க முடியாமல் போகலாம். ஆனால் என் இதயத்தில் ஆழமாக எனக்கு தெரியும், நான் நேசிக்கும் ஒருவன் நீ, உன்னை விட்டுவிட முடியாது.
எப்பொழுதும் நாம் தூரத்தில் இருக்கலாம், ஆனால் இதயத்தில் தூரம் இல்லை
என் அனைத்தையும் விரும்பும் உங்களை கண்டுபிடிப்பதே நான்அனுபவித்த மிக அழகான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.
நான் முதலில் அவனை நண்பனாகவே பார்த்தேன். பின்னர் நான் அவனை காதலனாக உணர்ந்தேன்.
என் கணவனின் இதயமே நான் வாழும் வீடு
எனக்கு உன் மீதான காதல் என்பது ஒரு பயணம் போன்றது. அந்தப் பயணத்தில் தொடக்கம் எப்பொழுதும் இருக்கும், முடிவு என்பது இல்லை
எனக்கு பிடித்தமான இடம் என்பது உன் கைகளுக்குள் இருப்பது!..
நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நான் உன்னை நம்புகிறேன். தொடருங்கள்
எனது பலமும் பலவீனமும் ஒன்றுதான். அது நான் உன் மீது கொண்ட காதல்.
நான் சத்தியமாக சொல்கிறேன். நமது காதல் கதைக்கு முடிவு என்பதே இல்லை.
நான் உன்னை மெதுவாக சந்தித்தேன். ஆனால் அன்று முதல் என் உலகமே மாற்றத்தை உணர்ந்தது.
நமது சந்தோசத்தை விட இன்னொருவரின் சந்தோசத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதே காதல்
ஒரு பெரிய உறவு இரண்டு விஷயங்களைப் பற்றியது. முதலில்,ஒற்றுமைகளைப் பாராட்டுதல், இரண்டாவதாக, வேறுபாடுகளை மதிப்பது.
எனது இதயம் எப்பொழுதும் சரியானதாக உள்ளது. ஏனென்றால் உள்ளே நீ இருக்கிறாய்!.
என் கண்கள் உன்னை பார்க்க ஏங்குகிறது. என் கைகள் உன்னை பிடிக்க ஏங்குகிறது. நான் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்
"காதல் என்றால் என்னவென்று எனக்குத் தெரிந்தால் அதற்குக் காரணம் நீதான்."
உன் கைகள் கோர்த்து நடந்த சிறுதளி தூரமும், பேரானந்தமாய் தோன்றுதடி பேரழகே, தினமும் இருவரின் தோள்கள் உரசி நடக்க, ஊமையானேன் உன் அருகே, எந்நேரமும் உன் கண்ணத்தோடு உரசி உன் வாசம் சுவாசிக்கும் வரம் ஒன்று கொடு போதும், உன் பின்னழகின் ரசிகன், இன்று கவிஞன்…. 100
நீ சுதந்திரமாய் வாழ்ந்தாய் என்பதற்கு உதாரணம், பிறரை சுதந்திரமாய் வாழ வழி வகுத்தாய் என்பதே……
கருமேக காற்று களிகூர கண்ணத்தில் மழைத்துளிகள் உரச அவள் வாசமும் மண் வாசமும் மணம் வீச மாறுதடி என் வானிலை வாழ்க்கை மந்திரமாய் அவள் செய்த மாயை..
நீ இல்லை எனத் தெரிந்தும் உனை பற்றி வரிகள் இல்லையென்று என் காகிதங்கள் வருடுதடி, நீ தந்த நினைவுகள் போதும் வரிகளை நிரப்புவதற்கல்ல, ஓர் அழகியின் மதிப்பை எழுத….
ஜுலை மாதத் தூரலில் காற்றோடு வீசும் மண் வாசத்தை விட அவள் வாசம் எனை மயக்க, குடைக்குள் வா என்று அழைக்காமல், குடையை என்னிடம் தந்து எனை அழைத்து செல் என்று தோள்கள் உரசி நடந்தாலே…. இதுவும் உரிமை கொண்ட காதலோ?
இரவு நேர தூக்கம் கெடுத்த அழகியே… உன்னோடு நெருக்கம் கண்ட நொடிகள் மனதில் பாடலாய் ஓடுதடி, உன் இடையை கிள்ளி கொஞ்சும் போது நீ சினிங்கி வரும் அழகு போதாதா? அளவின்றி நீ எனக்கு முத்தக்கோரும் இசைக்கு ஈடாய் வேறு இசை வேண்டுமா? உன் வாசம் தேடும் என் சுவாசத்திற்கு oxygen-ம் போதாதடி! வேறு பாடல்கள் எதற்கு? கவிதையாய் நீ இருக்க……
கூட்ட நெரிசலிலும் கொள்ளை அழகாய் தோன்றினாள், என் பெட்டியில் அவள் பாதம் பதிக்க, தடம் புரண்டது இரயிலா? என் மனமா?காதலோ?
இறுக்கி கட்டிக்கொண்டேன் ஆசை மோகத்தால், வெந்து போனேன் உந்தன் சூடான மூச்சுக்காற்றால், தழுவ உணர்ந்தேன் உன் மெல்லிடை அழகை, நெருங்கி வா….. என் அழகிய தீயே, மோதிக்கொள்வோம் யார் முத்தங்கள் சிறந்தது என்று???
தூக்கமில்லாமல் நடுஇரவில் உன் நிழற்படம் ஏந்தி கடத்திய நாட்களே இங்கு அதிகம், இக்கவிஞனின், பல இரவுகளை பகலாக்கிய பாவை….. நீயடி கவிஞன் காதலன் ஆனான்… அவ்வழகி கவிஞனின் கவிதையானாள், நான் கண்ட உலக அழகியே என்றும் உன் காலடியில் இந்த கவிஞன்…..
என் பாவை உலா வந்த நேரம் எங்கே? என் கண்கள் உனை தேடிய காலம் எங்கே? ஏன் இந்த இடைவெளி? வீண் கோபத்தை வெறுத்து, வெப்பம் தணிய முத்தச்சண்டை செய்வோம் வா